தாஜ்மஹாலை கட்டியது யார்..? ஆய்வு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (17:44 IST)
தாஜ்மஹாலை கட்டியது யார் என ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

இந்து சேனா என்ற அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை கண்டறிய வேண்டும் என வழக்கு தொடர்ந்தது. முகலாய பேரரசர் ஷாஜகானால் தாஜ்மகால் கட்டப்பட்டது அல்ல என்றும் ராஜா மான்சிங் என்பவர் தான் தாஜ்மஹாலை கட்டினார் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவில் தாஜ்மஹாலின் வயது குறித்தும்,  ராஜா மான் சிங்கின் அரண்மனையின் கட்டப்பட்ட ஆண்டு மற்றும் அது தொடர்பான விசாரணை நடத்த ஏஎஸ்ஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது தாஜ்மஹாலின் வயது குறித்தும்  தாஜ்மஹாலை கட்டியது யார் என்பது குறித்தும் மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்