கல்யாணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்த காதலர்களை தீர்பால் தாக்கிய நீதிமன்றம்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (22:15 IST)
கல்யாணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்த காதலர்களை தீர்பால் தாக்கி உள்ளது கேரள நீதிமன்றம்.


 

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் இருக்கும், மார் தோமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ.ஆங்கில இலக்கியம் படித்து வந்த 19 வயது மாணவனும், 20 வயது மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரம் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டில் இருந்து தலைமறைவாகி உள்ளனர்.

இவர்களின் பெற்றவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரை தேடி வந்தனர். இதை அடுத்து, இவர்கள் இருவரும், திருவனந்தபுரத்தில் ஒரு விடுதியில் கல்யாணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்து வருவதாக தகவல் கிடைத்து, காவல்தூறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், காதலர்களில், ஆண் இன்னும் திருமண வயதை எட்டவில்லை என கூறி, இவர்கள் இருவரையும் அவர்கள் பெற்றோருடன் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து, இவர்கள் இருவரையும், கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.  இந்நிலையில், நன்கு படித்து மதிப்பெண் எடுக்க கூடிய அப்பெண், கல்லூரியில் மீண்டும் சேர்த்து கொள்ள வேண்டும் என நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டார். அதை கல்லூரி நிர்வாகம் ஏற்று கொள்ளாததால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி, ”திருமண வயதை எட்டாத நிலையில், இருவரும் கணவன் மணைவி போன்று ஒன்றாக வாழ்ந்தது சட்டப்படி தவறு, மேலும், உங்கள் ஒழுங்கீன மற்ற செயலக்கு, கல்லூரி நிர்வாகம் உங்களை இடைநீக்கம் செய்தது சரி என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.
அடுத்த கட்டுரையில்