300-க்கே சமூக பரவலா என கேரளாவில் பீதி?

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (15:16 IST)
கேரளாவில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 133 பேருக்கு நோய் பரவி உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த போது கேரளாவில் அதிகளவிலான தொற்று காணப்பட்டது. ஆனால் அம்மாநில அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் கேரளாவில் 339 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 149 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இது குறித்து பினராயி விஜயன் கூறியுள்ளதாவது, நோய் பாதிக்கப்பட்டவர்களில் 117 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 74 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 133 பேருக்கு நோய் பரவி உள்ளது. 
 
ஆனால், இவர்களில் 7 பேருக்கு எப்படி நோய் பரவியது என்று தெரியவில்லை. கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதின் மூலம் நோய் பரவுவதும் அதிகரித்து வருகிறது. எனவே, அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்  என எச்சரித்துள்ளார். 
ஆனால், மத்திய அரசு இந்தியா இன்னும் சமூக பரவல் எனும் நிலையை எட்டவில்லை என அறிவித்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்