கட்டுக்குள் வந்த கொரோனா - இந்திய நிலவரம்!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (10:14 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,993 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,77,387 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 101 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,212 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,307 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,06,78,048 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்