1.11 கோடியை நெருங்கும் பாதிப்பு - இந்திய கொரோனா நிலவரம்!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (10:19 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,510 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,10,96,731 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 106 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,157 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,288 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,07,86,457 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,68,627 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்