இந்தியாவில் 10 லட்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (09:45 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 34,956 பேருக்கு கொரோனா பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்து கட்ட ஊரடங்குகளும் முடிந்து விட்ட நிலையிலும் கொரோனா பாதிப்புகள் பல மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 10 லட்சம் பாதிப்புகளை இந்தியா தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 34,956 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 10,03,832 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,12,815லிருந்து 6,35,757ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,915லிருந்து 25,602ஆக உயர்வு  6,12,815 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்