முதல்வர் மீது சர்ச்சை பேச்சு; மத்திய அமைச்சர் கைது !

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (15:40 IST)
முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் எனக் கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ராணேவை நாசிக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராய்க்கட் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நாராயண் ராணே, முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் எனக் கூறினார்.

அவரது பேச்சு பெரும் சர்ச்சையான நிலையில், நாசிக் , புனே ஆகிய கவல்நிலையங்களில் இதுகுறித்துப் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று நாசிக் காவல்துறையினர் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்துள்ளனர்.

தற்போது மத்திய அமைச்சர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதால் இந்த விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்