இன்று ஒரே நாளில் 50,000 கோடி நஷ்டம்: 24வது இடத்திற்கு சரிந்த அதானி..!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (13:43 IST)
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று ஒரே நாளில் 5 சதவீதம் குறைந்ததால் 50,000 கோடி நஷ்டம் என்றும் இதனால் உலக பணக்காரர் பட்டியலில் அதானி 24 ஆவது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹண்டன்பர்க் என்ற நிறுவனத்தின் அறிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் படுமோசமாக சரிந்து வருகிறது. 
 
இதனை அடுத்து உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து அதானி பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பதும் அதன் பின் அவர் இருபதாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 5% சந்தித்தது. அதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 50,000 கோடிக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இதனால் உலக பணக்காரர் பட்டியலில் 24-வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்