3 மாநில தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

Webdunia
ஞாயிறு, 4 மார்ச் 2018 (15:11 IST)
நடைபெற்று முடிந்த திரிபுரா, நாகலாந்து, மற்றும் மேகாலயா மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளது. அனேகமாக மூன்று மாநிலங்களிலும் அந்த கட்சி கூட்டணி கட்சியின் உதவியால் ஆட்சி அமைத்துவிடும் என்றே தெரிகிறது. இந்த மூன்றையும் சேர்த்தால் இந்தியாவில் பாஜகவின் ஆட்சி 22 மாநிலங்களில் உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஒரே பெரிய மாநிலம் கர்நாடகா மட்டும்தான். அதுவும் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பறிபோக வாய்ப்பு உண்டு. இந்த தேர்தல் முடிவுகளில் இருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது.

வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு போட்டி கொடுக்க காங்கிரஸ் கட்சியால் முடியாது என்பது. பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் அது காங்கிரஸால் நிச்சயம் முடியாது என்பது தெளிவாகிறது. எனவே அந்தந்த மாநிலங்களில் செல்வாக்கு உள்ள கட்சிகள் தேசிய அளவில் ஒன்று திரண்டு ஒரு புதிய அணியை ஏற்படுத்தி போட்டியிட்டால் மட்டுமே பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்