ராகுல்காந்தி பாதயாத்திரை; முன்னாள் மந்திரி கார் மோதி விபத்து!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (09:37 IST)
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சரின் கார் விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த யாத்திரை நாளை மகாராஷ்டிரா எல்லையை அடைகிறது.

இந்த பாதயாத்திரை ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக விவகாரங்களை காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஆரிப் நசீம் கான் கவனித்து வருகிறார். இந்நிலையில் பாதயாத்திரை நிர்வாக விவகாரமாக நாண்டெட் நகரின் பிலோலி சுங்க சாவடி பகுதியில் அவர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது மற்றொரு வாகனம் நசீம் கான் வாகனத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கார் சேதமடைந்ததுடன் டிரைவர்களும் காயமடைந்தனர். உடனடியா அப்பகுதி மக்கள் காரில் இருந்தவர்களை மீட்டுள்ளனர். அதை தொடர்ந்து மற்றொரு காரில் நசீம் கான் புறப்பட்டு சென்றார். அவர் கார் மீது மோதியவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்