80% வருகைப்பதிவு இல்லையா? தேர்வு எழுத முடியாது: உபி முதல்வர் அதிரடி

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (07:14 IST)
உத்தரபிரதேச மாநில முதல்வர் தினந்தோறும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அம்மாநில மக்களின் நன்மதிப்பை பெற்று வரும் நிலையில் நேற்றைய அதிரடியாக  9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 80% வருகைப்பதிவு கட்டாயம் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு பெரும் ஆதரவும் சிறிய எதிர்ப்பும் மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.



 


முதல்வரின் உத்தரவு குறித்து கருத்து கூறிய அம்மாநில தலமை செயலாளர் ஜிதேந்திர குமார், மாணவர்களின் வருகைப்பதிவு 80% இருக்க வேண்டியது அவசியம் என உத்தரவிடப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

சரியான வருகைப்பதிவு இல்லாமல் தேர்வு எழுதும் மாணவர்கள் தரமான மாணவர்களாக இருக்க முடியாது என்றும், வருகைப்பதிவில் முறைகேடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்