”திருமணங்களை தள்ளி வைக்கவும்..” மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் கலெக்டர்

Arun Prasath
செவ்வாய், 10 மார்ச் 2020 (15:27 IST)
கொரோனா வைரஸ் கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் பரவி வரும் நிலையில், திருமணங்கள், மற்றும் பொது நிகழ்ச்சிகளை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என அம்மாவட்ட மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதன் முதலாக கொரோனா வைரஸால் கேரளாவில் பாதிக்கப்பட்ட 3 பேர், குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இத்தாலியில் இருந்து கேரளா வந்த பத்தனம் திட்டா மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் அவர்களின் உறவினர்களின் 2 பேருக்கும் பரவியது. அவர்கள் 5 பேருக்கு பத்தனம் திட்டா மற்றும் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் இத்தாலியில் இருந்து கேரளா வந்த கண்ணூரை சேர்ந்த தம்பதியரின் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் கேரளாவில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் பரவி வரும் நிலையில், திருமணங்களை, மற்றும் பொது நிகழ்ச்சிகளை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என அம்மாவட்ட மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்