கர்நாடக மாநில தேர்தல் முடிவு கடந்த பத்தாம் தேதி வெளியான நிலையில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆகியும் இன்னும் முதல்வர் பதவி யாருக்கு என்பதையே முடிவு செய்யவில்லை. ஏற்கனவே டி கே சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகிய இருவரும் முதல்வர் பதவி போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வேறு சிலரும் முதல்வர் பதவியை குறி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு லிங்காயத் வகுப்பினர்தான் அதிகம் உதவி செய்துள்ளனர் என்றும் லிங்காயத் பகுதியில் மற்றும் 34 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்றும் எனவே லிங்காயத் வகுப்பினருக்கும் முதலமைச்சர் பதவியும் 9 இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்களில் 5 பேருக்கு அமைச்சரவை பதவியும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.