கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பெரும் அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்று இருந்தாலும் முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. சித்தராமைய்யா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரும் தாங்கள்தான் முதல்வர் என தலைமையிடம் வலியுறுத்தி வருவதாகவும் இருவருமே முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் தேர்தல் முடிவு அறிவித்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் இன்னும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் பதவி யாருக்கு என டிகே சிவகுமார் மற்றும் சித்தராமைய்யா ஆகிய இருவருக்கும் கடும் போட்டி நிலவிவரும் நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பரமேஸ்வரா, காங்கிரஸ் உயர்மட்ட குழு முடிவு செய்து என்னை ஆட்சி நடத்த சொன்னால் நான் முதல்வர் பதவியை பொறுப்பேற்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது