நித்யானந்தாவின் தனித்தீவு ... தனிநாடு... நானே ராஜா...நானே மந்திரி ??

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (18:54 IST)
ஆன்மீகத்தில் ஈடுபட்ட குறுகிய காலத்தில், அதுவும் சிறிய வயதிலேயே, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும் செல்வாக்கு பெற்று விளங்கியவர்  நித்யானந்தா. 
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தாவுக்கு பெங்களூரை அடுத்த பிடதியை தலைமயிடமாகக் கொண்டு, பரமஹம்ச நித்யானந்தா என்று ஒரு ஆசிரமம் நடத்தி வந்தார். இது இந்தியாவில் பல  மாநிலங்களிலும் ,வெளிநாடுகளிலும் பல கிளைகள் விரிந்துள்ளன.
 
நித்யானந்த ஒரு வீட்டில் நிகழ்ச்சிக்கு சென்றாலே பல லட்சங்கள் காணிக்கை கொடுக்க வேண்டும் என செய்திகளும் நாளிதல்களில் ஒருகாலத்தில் தீயாகப் பரவி வந்தன.ஆனாலும், மக்களும், பக்தர்களும் நித்யானந்தா வந்தாலே போதும் ..அது ஆசீர்வாதம்  என காத்துக் கிடந்தனர்.
 
ஆனால், நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருக்கும் ஆபாச வீடியோ வெளியான அன்று நித்தியானந்தாவின் ஒட்டுமொத்த இமேஜும் டேமேஜ் ஆனது. அவரது நம்பிக்கைக்குரிய பக்தர்களும் தலைதெறித்து ஓடினர்.
அதன்பின்னர், கர்நாடகத்தில் உள்ள அவரது பிடதி ஆசிரமம் அடித்து நொறுக்கப்பட்டது.
 
இதையடுத்து, சமீபத்தில் நித்தியானந்தாவின் முன்னாள் உதவியாளர், தனது இரு மகள்களை அடைத்து  வைத்து நித்யானந்தா கொடுமைப்படுத்துவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
 
இந்தப் புகாரை அடுத்து  சிறுமிகளை தொந்தரவு செய்தது தொடர்பாக, ,நித்யானந்தா மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர்  தப்பி ஒடியதாக தகவல்கள் வெளியானது.
ஆனால், அதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது. அதனால், போலீஸார் நித்யானந்தாவை வலை வீசி தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், சர்ச்சைகளில் சிக்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ள நித்யானந்தா, கைலாஷ் என்ற பெயரில் ஒரு தனித் தீவை வாங்கி அதில் தனிநாடு அமைக்கப் போவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
நித்யானந்தா, தென் அமெரிக்கா நாடான ஈகவெடார் அருகில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் விர்டுவல் ஹிந்து என்ற பெயரில் ஒரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
ஏற்கனேவே, தனது கனடா நாட்டு சீடர்  சாரா லாண்ட்ரிடம் ஒரு தனித் தீவை உருவாக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்ட நித்யானந்தா, தான் ஒரு தனிநாடு குறித்து பேசினார். அந்த நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 
 
மேலும், தனது வலைதளப்பக்கத்தில், ஹிந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் தனது கைலாசம் என்ற தனிநாட்டில் குடிபுகலாம் என வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்