குழந்தைகளைக் கடத்தி துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழ சாமியார் நித்யானந்தா இப்போது தலைமறைவாகியுள்ளார். அவர் வெளிநாடுகளுக்குத் தப்பி சென்றுவிட்டதாக சொல்லப்பட்டாலும் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது இப்போது வரைத் தெரியவில்லை. இந்நிலையில் அவரின் அடுத்த திட்டமாக அவர் கரீபியன் கடல் பகுதியிலுள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதைத் கைலாசா என்ற தனிநாடாக அறிவிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதை இந்துமதத்தின் தலைநகராக (வாட்டிகன் போல) அறிவித்து தன்னையும் இந்துமதத்தின் தலைவராக அறிவித்துக் கொள்ள இருக்கிறாராம் நித்யானந்தா. இதற்கான சட்டரீதியான வேலைகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இது சம்மந்தமாக இணையதளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தன் நாட்டுக்காக இரு வண்ணத்திலான பாஸ்போர்ட்டுகளையும் அவர்கள் அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த நாட்டில் இந்துக்கள் அனைவரும் அல்லது இந்து மதத்தைப் பின்பற்ற நினைக்கும் எவரும் இணையலாம் என தெரிவித்துள்ளனர்.