இந்தியாவிலேயே தரமான காற்று கிடைக்கும் நகரம்.. நெல்லைக்கு முதலிடம்..!

Mahendran
வியாழன், 16 ஜனவரி 2025 (16:07 IST)
இந்தியாவிலேயே தரமான காற்று கிடைக்கும் நகரங்கள் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த திருநெல்வேலி முதலிடம் பெற்று இருப்பது, தமிழகத்திற்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் காற்றின் தரம் சவாலாக இருக்கும் நிலையில், டெல்லி உள்பட பல நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
 
இந்த நிலையில், மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதும் காற்றின் தர கட்டுப்பாட்டுக்கான தகவலை வெளியிட்டுள்ளது. தூய்மையான காற்றை அனுபவிக்கும் நகரங்களில் முதல் இடத்தை திருநெல்வேலி பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டுக்கு பெருமையாகக் கருதப்படுகிறது.
 
இரண்டாவது இடத்தில் அருணாச்சலப்பிரதேசத்தின் நாகர் லகுன் என்ற நகரமும்,  மூன்றாவது இடத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மடிக்கேரி நகரமும் இடம்பெற்றுள்ளது.
 
இந்த பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு நகரமான தஞ்சாவூர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மறுபுறம், காற்றின் தரம் மிக மோசமாக இருக்கும் நகரங்களில், முதல் இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது. இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் நகரம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் மேகலாயாவின் பிரிட்ஹேட்  நகரம் உள்ளது.
 
சண்டிகர், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை காற்றின் தரம் மோசமாக உள்ள மாநிலங்களின் முதல் 10 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்