வங்கிகள் சேமிப்பு கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச மினிமம் பேலன்ஸாக 3,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தற்போது 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியும் 1,000 ரூபாயில் இருந்து 3,500 ரூபாயாக மினிமம் பேலன்ஸை அதிகரித்துள்ளது. கனரா வங்கியில் மினிமம் பேலன்ஸ் 1,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
மினிமம் பேலன்ஸ் குறைந்தால், அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் உங்கள் வங்கியில் எவ்வளவு பணம் இருக்கிறதோ, அதுவரை மினிமம் பேலன்ஸ் அபராத தொகை பிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் முதல், மாநகர பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் கட்டணம் இல்லாமல் மூன்று முறையும், அதன் பின் ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கு 25 ரூபாய் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த கட்டணம் 20 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கி கணக்கு இல்லாத மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், 30 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.