விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி தரையிறக்கிய இஸ்ரோ: விஞ்ஞானிகள் சாதனை..!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (12:32 IST)
நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 3,வெற்றிகரமாக செயல்பட்டது என்பதும் நிலவில் தற்போது சூரிய வெளிச்சம் இல்லை என்பதால் தற்காலிகமாக ஸ்லீப் மோடுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன 
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி நிலவிலுள்ள விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி மீண்டும் தரையிறக்கி இஸ்ரோ சோதனை செய்ததாகவும் இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
விக்ரம் லேண்டர் ஏற்கனவே நின்றிருந்த இடத்திலிருந்து 30 முதல் 40 சென்டிமீட்டர் உயரத்துக்கு மேலே எழுப்பி பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் விக்ரம் லேனரின் பாகங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுவதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்