மத்திய அரசு கட்டுப்படுத்த ஆந்திரா ஒன்றும் தமிழகம் இல்லை...

சனி, 21 ஏப்ரல் 2018 (12:45 IST)
தமிழகத்தை போல ஆந்திராவை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். 
 
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தால், ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகியது. மேலும், மக்களவையில் இருந்து தனது கட்சியின் எம்பிக்களையும் ராஜினாமா செய்ய வைத்தார். 
 
எனினும் இந்த கோரிக்கையை மத்திய அரசு கண்டுக்கொள்வதாய் இல்லை. இதையடுத்து ஆந்திர நலனுக்காக நேற்று இந்திராகாந்தி மைதானத்தில் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். 
தெலுங்கு தேச கட்சி அமைச்சர்களும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதத்தை நடத்தினர். இந்நிலையில், இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், மாநில நலனை மத்திய அரசுக்காக எப்போதும் விட்டு கொடுக்கப் போவதில்லை. தமிழகத்தை போல ஆந்திரத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது. அதை எப்போதும் நடத்த விடமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே, தமிழக ஆளும் கட்சியினர் மத்திய அரசுக்கு கைப்பாவையாக இருப்பதாக எதிர்கட்சிகள் மற்றும் பலர் வெளிப்படையாக தெரிவித்து வரும் நிலையில், சந்திரபாபு நாயுடுவின் இந்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்