நீட் தேர்வு மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் என்னென்ன?

வியாழன், 19 ஏப்ரல் 2018 (11:09 IST)
மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நடைமுறை தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு முதல்முறை என்பதால் நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் ஆடை கட்டுப்பாடு குறித்த விஷயத்தில் கவனக்குறைவாக இருந்ததால் ஒருசிலர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. ஒருசிலரின் முழுக்கை ஆடைகள் கிழிக்கப்பட்டு அரைக்கையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு குறித்த தகவல்களை சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
 
மாணவிகள் தலையில் பூக்கள் வைக்கக்கூடாது, பெரிய பட்டன் கொண்ட ஆடைகள் மற்றும் பேட்ஜ் அணியக் கூடாது. அதுமட்டுமின்றி அதிக உயரம் கொண்ட ஹைஹீல்ஸ் செருப்புகள் அணியக் கூடாது, அதேபோல் ஷூவும் அணியக்கூடாது. மேலும் முழுக்கை ஆடைகளுக்கும் அனுமதி இல்லை
 
மேலும் செல்போன் உள்ளிட்ட தொலைத் தொடா்பு சாதனங்களை தோ்வு மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. ஜியோமெட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் ஆகிய பொருட்களுடன் தேர்வு அறைக்கு செல்ல அனுமதி கிடையாது. 
 
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள இந்த ஆடைக்கட்டுப்பாடுகளை பின்பற்றி டென்ஷன் இல்லாமல் தேர்வை எழுதும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்