மத்திய பெண் அமைச்சரை ஈவிடீசிங் செய்த வாலிபர்கள்

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (15:43 IST)
உத்திரபிரதேசத்தில் 3 வாலிபர்கள் சேர்ந்து பெண் அமைச்சரை ஈவிடீசிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மத்திய பெண் அமைச்சரான அனுபிரியா பட்டேல், மிர்சாபூர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு பின் காரில் வாரணாசிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
 
அப்போது அவரது காரை பின் தொடர்ந்த 3 வாலிபர்களை, பெண் அமைச்சரை பார்த்து ஈவிடீசிங் செய்தனர். அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞர்களை எச்சரித்த போதும் அவர்கள் அமைச்சரை கேலி செய்தனர்.
 
இதனையடுத்து வாரணாசி உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர், அந்த வாலிபர்களை கைது செய்தனர். போலீஸார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்