பிரதமர் மோடி படித்த பள்ளிக்கு இலவச கல்வி சுற்றுலா? – மத்திய அரசின் புதிய திட்டம்!

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (08:58 IST)
பிரதமர் மோடி படித்த பள்ளிக்கூடத்திற்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இந்தியாவில் 2014 முதல் நடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக இருந்து வருபவர் நரேந்திர மோடி. குஜராத்தில் தொடர்ந்து பல காலம் முதல்வராகவும் செயல்பட்டவர் பிரதமர் மோடி.

குஜராத்தில் அவர் பிறந்து வளர்ந்த பகுதிகளை பிரபலப்படுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரதமர் மோடி சிறுவயதில் படித்த குஜராத் மாநிலத்தின் வாட் நகரில் அமைந்துள்ள பள்ளிக்கு மாணவர்களை இலவச சுற்றுலா அழைத்து செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரேர்னா என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி இந்தியா முழுவதும் உள்ள 766 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அனைத்து வசதிகளுடன் இலவசமாக அழைத்து செல்லப்படுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்