ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

Senthil Velan
சனி, 6 ஜூலை 2024 (17:14 IST)
2024 - 25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வருகிற 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் பரிந்துரைப்படி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஜூலை 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடத்துவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2024 - 25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் ஜூன் 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக தேஜ கூட்டணி அரசு அமைந்த பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு நேர பட்ஜெட் இதுவாகும். 

ALSO READ: ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்