பி.எஸ்.என்.எல் சேவையால் நாட்டிற்கே ஆபத்தா? அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (07:28 IST)
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமாளித்து வெற்றி நடை போட்டு வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு ஆதரவு குவிந்து வரும் நிலையில் இந்த நிறுவனத்தால் நக்ஸல்கள் உள்ளிட்ட தீவிரவாதிகள் பயன்பெறுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


 


பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பிளஸ்களில் ஒன்று இந்த சிம் வைத்திருப்பவர்களுக்கு டவர் பிரச்சனையே வராது. புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்களிலும், இந்தியாவில் எந்த பகுதியிலும் இதன் டவர் நன்றாக இருக்கும்

ஆனால் அதே நேரத்தில் நக்ஸல்களின் அடாவடி அதிகம் உள்ள பகுதிகளிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவையை அளிப்பதால் நக்ஸ்ல்கள் உள்ளிட்ட தீவிரவாதிகள் பி.எஸ்.என்.எல் சிம் வாங்கி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.  மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஆந்திரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒரிசா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பி.எஸ்.என்.எல் டவர் மட்டுமே நன்றாக வேலை செய்து வருவதால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்