புகுந்த வீட்டுக்கு வர மறுத்த மணப்பெண்ணை அலேக்காக தூக்கி சென்ற மாப்பிள்ளை!

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (16:42 IST)
காலங்காலமாக திருமணமான பெண்கள் பிறந்த வீட்டில் கண்ணீருடன் விடைபெற்று புகுந்த வீட்டுக்கு செல்வது தான் இந்தியா முழுவதும் நடைபெறும் முறையாக உள்ளது. இந்த நிலையில் வட இந்தியாவில் நடந்த ஒரு திருமணத்தின் போது திருமணத்திற்கு பின்னர் புகுந்த வீட்டுக்கு செல்வதற்காக மணப்பெண் தயாரானார்.
 
மணப்பெண் தனது தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் கண்ணீருடன் விடை பெற்றுக் கொண்டிருந்தார். நிமிடக்கணக்கில் அவர் அழுதுகொண்டே உறவினர்களை கட்டிப்பிடித்துக்கொண்டு காலம் தாழ்த்திய நிலையில் பொறுமை இழந்த மாப்பிள்ளை திடீரென அங்கு வந்து மணப்பெண்ணை அப்படியே அலேக்காக தூக்கிச் சென்றார்
 
அப்போது அவர் தன்னுடைய தாய் தந்தை மற்றும் சகோதரர்களின் பெயரை கூறி கதறி அழுதார். எல்.கே.ஜி படிக்கும் குழந்தை பள்ளிக்கு செல்ல முடியாது என அடம்பிடிப்பது போல் எனது குடும்பத்தினர்களை விட்டு விட்டுச் வரமாட்டேன் என்று மணப்பெண் கூறியது ஒரு பக்கம் சோகமாகவும் இன்னொரு பக்கம் காமெடியாகவும் இருந்தது. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்