2வது டி- 20 போட்டியில் இந்தியா அபார வெற்றி...

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (16:10 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றது. இதனையடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையே 2வது டி20 போட்டி நடைபெற்று வருகின்றது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து  5 விக்கெட் இழப்பிற்கு 132 எடுத்து, இந்திய அணிக்கு இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்திய அணி தரப்பில், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் தாகுர், ஷமி மற்றும் துபே ஆகியோர் தலா விக்கெட் வீழ்த்தினர்.
 
அடுத்து களமிறங்கும்  இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்திருந்தனர்.
 
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
அதனால், மொத்தமுள்ள 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
 
இந்தப் போட்டியில் கே.எஸ்.ராகுல் அரைசதம் எடுத்து குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்