பூஸ்டர் தடுப்பூசிக்கு எந்த டோஸ்?

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (16:05 IST)
பூஸ்டர் டோஸ் குறித்து மத்திய அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பூஸ்டர் டோஸை கலந்து போட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவது அவசியமானது என அறிவுறித்தப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் மிக வேகமாக பரவும் தன்மை உள்ளதால் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வதையும் உலக நாடுகள் ஊக்கப்படுத்தி வருகின்றனர். 
 
இதனிடையே இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர். 
 
இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் 18 வயது மேலானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அறிவித்திருந்தார். 
 
மேலும் பூஸ்டர் டோஸ் குறித்து மத்திய அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பூஸ்டர் டோஸை கலந்து போட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நபர் முதல் 2 தவணை தடுப்பூசிகளாக கோவாக்சினை போட்டிருந்தால் அதையே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்த வேண்டும். அதேபோல கோவிஷீல்டு செலுத்தி இருந்தால் அதனையே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்த வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்