அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் வெங்கையா நாயுடு: பாஜகவின் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளர்!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (10:08 IST)
பாஜகவின் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று காலை 11 மணியளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ள நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


 
 
துணை குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. துணை குடியரசுத்தலைவரையும் எம்பிக்கள், எம்எல்ஏக்களே தேர்ந்தெடுப்பார்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தியை துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக ஏற்கனவே அறிவித்த நிலையில் பாஜக யாரை அறிவிக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
 
இந்நிலையில் பாஜகவின் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளர் வெங்கையா நாயுடு என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார். இதனையடுத்து அவர் தற்போது உள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று காலை 11 மணியளவில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
அடுத்த கட்டுரையில்