போலிஸாரிடம் இருந்து 12 லட்சத்தை பறித்துக்கொண்டு சென்ற பாஜகவினர்- தெலங்கானாவில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (16:41 IST)
தெலங்கானாவில் பாஜக வேட்பாளரிடம் இருந்து போலீஸார் கைப்பற்றிய பணத்தை பாஜகவினர் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் தப்பக் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதி பாஜக வேட்பாளாராக ரகுநந்தன் ராவ் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக சொல்லப்பட்ட நிலையில் போலீஸார் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி 19 லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

இது பற்றி தகவலறிந்த பாஜகவினர், காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களிடம் இருந்து 12 லட்சம் ரூபாயைப் பிடுங்கி சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு ‍செய்த போலீசார், இது சம்மந்தமாக பண்டி சஞ்சய் குமா‌ரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்