வருகிறதா புது சட்டம் ? –இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் இதெல்லாம் கிடையாது !

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (08:25 IST)
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என்ற சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

மக்கள்தொகை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் உள்ளது. இந்நிலையில் மக்கள் தொகையை கட்டுக்குள் வைக்க பொது சிவில் சட்டம் எனும் புதிய சட்ட மசோதாவை கொண்டுவர உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் படி இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு ரேஷன், மான்யம் போன்ற அரசு சலுகைகள் நிறுத்தப்படும் என சொல்லப்படுகிறது. அதேப்போல மூன்றாவது குழந்தையை அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க அனுமதிக்கப்படமாட்டது  என சொல்லப்படுகிறது. இந்த சட்டத்தை சீனா 30 ஆண்டுகளுக்கு முன்னரே தங்கள் நாட்டில் அமல்படுத்தியது. ஆனால் இதன்  விளைவாக அந்நாட்டில் இளைஞர்கள் தட்டுப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்