இந்த நிலையில் குடியிருப்பு சட்டத்துக்கு எதிராக அசாமில் மிகத் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினர்களும் ஒன்றுகூடி இந்த போராட்டத்தை நடத்தி வருவதால் அசாமின் பெரும்பாலான பகுதிகளில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் போலிஸ் மற்றும் இராணுவத்தினர் கலவரத்தை அடக்க தீவிர முயற்சியில் உள்ளனர்
இதனை அடுத்து அசாம் கண பரிஷத் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரபல்ல குமார் மகந்தா அவர்கள் இதுகுறித்து கூறிய போது ’குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தங்கள் கட்சி வாக்களித்தது தவறு தான் என்றும் தேவைப்பட்டால் தற்போது அசாமில் பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அசாமில் நடைபெற்று வரும் பாஜக அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது