இந்து பண்டிகைகளுக்கு விடுமுறை குறைப்பு- நிதிஸ்குமார் முடிவுக்கு பாஜக கண்டனம்

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (17:14 IST)
பீகாரில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.  இங்கு, இந்து பண்டிகை காலங்களில் மாநில பள்ளிகளுக்கான விடுமுறையை குறைக்க முடிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜென்மாஷ்டமி, ரக்சாபந்தன், ராம நவமி, சிவராத்திரி, தீஜ் வசந்த பஞ்சமி, ஜிவித்புத்ரிகா ஆகிய பண்டிகைகளுக்கான விடுமுறையை ரத்து செய்யவுள்ளதாக அரசு அறிவித்தது. 
 
இஸ்லாமிய பண்டிகைகாளாக ரம்ஜான்,  பக்ரீத்,  பண்டிகைகளுக்கு தலா 3 நாட்காள் விடுமுறையும், முஹரம் பண்டிகைக்கு 2 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
 
இந்த  நிலையில்,இந்துப் பண்டிகைகளுக்கு விடுமுறை குறைத்து இஸ்லாம் பண்டிகைகளுக்கு விடுமுறை அதிகரித்துள்ளதற்கு பாஜக தலைவர்கள் அரசை குற்றம்சாட்டி வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்