பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு: பீகார் முதல்வர் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (16:30 IST)
பீகார்  மாநிலத்தில் தற்போது 50% இட ஒதுக்கீடு முறை இருக்கும் நிலையில் அதை 65 சதவீத இட ஒதுக்கீடாக மாற்ற இருப்பதாகவும் அதுமட்டுமின்றி பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கிடையும் பின்பற்ற இருப்பதாகவும் ஆக மொத்தம் 75% இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த இருப்பதாகவும் பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். 
 
இதன்படி எந்தெந்த பிரிவுக்கு எவ்வளவு சதவீதம் இட ஒதுக்கீடு என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னர் இந்த இட ஒதுக்கீடு முறை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
1. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு 30%-ல் இருந்து 43% ஆக உயர்வு
 
2. பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு 13 % -ல் இருந்து 20 சதவிகிதம் ஆக உயர்வு
 
3. ஓபிசி இடஒதுக்கீடு 30 % -ல் இருந்து 43 சதவிகிதமாக உயர்வு
 
4. பழங்குடியினர் இடஒதுக்கீடு 2 சதவிகிதமாக நீடிக்கும்
 
5. பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு10 சதவீத இட ஒதுக்கீடு.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்