பீகாா் ஜாதிவாரி கணக்கெடுப்பில் பொய்யான தகவல்கள்: அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு..!

திங்கள், 6 நவம்பர் 2023 (10:00 IST)
பீகார் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இஸ்லாமியர்கள் மற்றும் யாதவர்கள் எண்ணிக்கை உயர்த்தி காட்டப்பட்டுள்ளதாகவும் இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பில் பொய்யான தகவல்கள் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்

 கடந்த மாதம் பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் அதன் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் யாதவா சமூகத்தினர் 14.27% இருப்பதாகவும் இந்துக்கள் 81% இஸ்லாமியர்கள் 17 சதவீதம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் கூறுகையில் அரசியல் லாபத்திற்காக இஸ்லாமியர்கள் மற்றும் யாதவா சமூக மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே உயர்த்தி காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது இதர பிற்படுத்த வகுப்பினருக்கு செய்யப்படும் அநீதி என்றும்  இந்த கணக்கெடுப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்