17 பேரை ஒரே நாளில் காவு வாங்கிய இடி, மின்னல்! – பீகார் முதல்வர் இரங்கல்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (10:12 IST)
பீகாரில் ஒரே நாளில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த 17 பேர் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பீகாரில் கடந்த சில வாரங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 17ம் தேதியன்று பீகாரில் இடி, மின்னல் தாக்கியத்தில் சம்பரான், போஜ்பூர், சரண், அராரியா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 17 பேர் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

ஒரே நாளில் இடி, மின்னல் தாக்குதலால் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ்குமார் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்து அறிவித்துள்ளார். மேலும் மக்கள் பேரிடர் மேலாண் கழகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்