தற்போது வரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. 27 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து அசாமின் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதால் பாதிப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.