நிதி கையாடல்: பாரத் பே நிறுவனத்தின் நிறுவனரின் மனைவி மீது நடவடிக்கை!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (20:39 IST)
நிதி கையாடல்: பாரத் பே நிறுவனத்தின் நிறுவனரின் மனைவி மீது நடவடிக்கை!
நிதி கையாடல் குற்றச்சாட்டு காரணமாக பாரத் பே நிறுவனத்தின் நிறுவனரின் மனைவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியாவில் நிதி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கிவரும் பாரத் பே நிறுவனரின் மனைவி நிதி கையாடல் செய்ததாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் 
இவர் நிறுவனத்துக்கு சொந்தமான பணத்தை கையாடல் செய்து தனக்கு அழகு சாதன பொருட்கள் வாங்கியதாகவும், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது
 
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தணிக்கை செய்து பார்த்தபோது அது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவர் வைத்திருக்கும் பங்குகளையும் ரத்து செய்வதாக பாரத் பே நிறுவனம் அறிவித்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்