ட்ரூ காலருக்கு பதில் பாரத் காலர்: இந்தியன் செயலி அசத்தல்!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (11:58 IST)
ட்ரூ காலருக்கு பதில் பாரத் காலர்: இந்தியன் செயலி அசத்தல்!
அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்தோ அல்லது நமது காண்டாக்ட்டில் இல்லாத நபர்களிடம் இருந்தோ வரும் அழைப்புகளை கண்டுபிடிக்க பலரும் ட்ரூ காலரை பயன்படுத்துவது வழக்கம் 
 
ஆனால் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இந்த செயலியை பயன்படுத்துவதில் பல அச்சங்கள் எழுந்துள்ளது. நம்முடைய மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் இந்த செயலி எடுத்துக் கொள்வதால் அதனால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்படுகிறது அதுமட்டுமின்றி ட்ரூகாலர் பயன்படுத்துவதால் மொபைல் போன் ஹேங் ஆவது குறித்த பிரச்சினைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்தியர்களின் தயாரிப்பில் உருவான பாரத் காலர் என்ற செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்றும் இந்தியாவில் 50 மில்லியன் டேட்டாக்களையும் உலகம் முழுவதும் ஒரு பில்லியன் யூசர்களின் டேட்டாக்களையும் கொண்டுள்ளது என்றும் இது முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்றும் இந்த செயலியை கண்டுபிடித்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயலியை இந்தியாவில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்