இன்று மாலை 5 மணிக்கு மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (10:27 IST)
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது என தகவல். 

 
மத்திய அமைச்சரவை சமீபத்தில் விரிவுபடுத்தப் பட்டது என்பதும் புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே. ஆம், புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த பதவி பிரமாணம் விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. மேலும், பிரதமர் மோடி தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டமும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்