கடல் அலைகளில் அடித்துச் செல்லப்படும் கார் : வைரலாகும் வீடியோ..

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (20:55 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கடற்கரையில் நின்றிருந்த ஒரு கார் அலைகளில் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கியது. இதையொட்டி கேரளாவில் பல பகுதிகளில் கோடை வெப்பத்தை விரட்டும் வகையில் மழைபெய்துவருகிறது.
 
மேலும் அரபிக்கடலில் கிழக்கே லட்சத்தீவுகள் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இருவாகியுள்ளதால் இது வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறி,புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் என்ற கடற்கரைக்குச் சில சுற்றுலா பயணிகள் வருகைதந்தனர். அவர்கள் கடற்கரை மணலில் காரை ஓட்டிச்சென்றதால் மணைல் கார் சிக்கியது. பின்னர் கார் ஒட்டுநர் வாகனத்தை விட்டு இறங்கி காரைத் தள்ளமுற்பட்டார்.
 
ஆனால் அலைகளில் அழுத்தத்தால் கார் வேகமாக கடலை நோக்கி இழுத்துச்செல்லப்பட்டது.இதையடுத்து கார் உரிமயாளர் அக்காரை பதறியபடி ஓடி காரை பிடித்துவைக்க முயன்றார். திரும்ப அலையில் கார் அடித்துச் செல்வதுமாக இருந்தது. இதை அவர்கள் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர். தற்போது அது வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்