’கொடுமை’ - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (09:33 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


 
 
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் வசித்து வந்தவர், மொஹர்ராம். 58 வயதாகும் அவர் ஒரு பழைய இரும்பு வியாபாரி. இந்நிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும், அவரது வீட்டின் கதவு திறக்கப்பட வில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை திறந்து பார்த்தபோது, மொஹர்ராமும், அவரது இருமகள்கள் மற்றும் இரு மகன்கள் கழுத்து அறுக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தனர். அவரது மனைவி தீதீயா (47), மட்டும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 
 
உடனே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்