ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முன்னாள் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது தவறெனவும், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்ற ஆம் ஆத்மி கட்சி,ஆட்சியில் இருந்து பாதியிலேயே விலகியதை அடுத்து அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
மேலும், நாடு முழுவதிலும் அக்கட்சிக்கு எதிர்பார்த்த அளவிற்கு ஆதாவு இல்லாமல் போனது.
இந்நிலையில், டெல்லியில் ஆட்சியிலிருந்து பாதியிலேயே விலகியதற்கு, மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்தபோது, ஆட்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறியது மிகப்பெரிய தவறு.டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்கும் எண்ணமில்லை.
நாங்கள் எங்களது கொள்கைகளுக்காக பதவி விலகினோம். ஆனால், மக்களுக்கு அது பிடிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.