மாதத்திற்கு 15ஜிபி இண்டர்நெட் இலவசம்! - முதல்வர் அறிவிப்பு!

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (15:44 IST)
அலைபேசி நிறுவனங்கள் டேட்டா பேக் விலையை அதிகரித்துள்ள சூழலில் மாதம் 15ஜிபி இலவச இண்டர்நெட் தருவதாக முதல்வர் அறிவித்திருப்பது மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் டெல்லியில் பெண்களுக்கு பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் கட்டணமில்லாமல் பயணிக்கும் வசதியை அறிமுகப்படுத்தினார். மெட்ரோ ரயிலில் இலவச பயண திட்டத்தை செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதால் தற்போது பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளைஞர்களை ஈர்க்கும் விதத்தில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் கெஜ்ரிவால். அதன்படி டெல்லியில் 11 ஆயிரம் இடங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மக்களுக்கு மாதம்தோறும் 15ஜிபி இலவச இண்டர்நெட் வழங்கப்பட உள்ளது.

டெல்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மக்களை கவர வேண்டும் என்பதற்காக கெஜ்ரிவால் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார் என எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் இது 2015ல் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுதான் என கெஜ்ரிவால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்