யாரும் ஏசி போட வேண்டும்: மின்பற்றாக்குறையால் அறிவுறுத்தல்

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (17:55 IST)
யாரும் ஏசி போட வேண்டும்: மின்பற்றாக்குறையால் அறிவுறுத்தல்
நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவின் பல மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இரவு நேரங்களில் யாரும் ஏசி போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாடெங்கிலும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் பற்றாக்குறை காரணமாக மின் நுகர்வை குறைத்துக் கொள்ளுமாறு ஆந்திர அரசு கேட்டுக்கொண்டுள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மின் பயன்பாடு அதிகமாக இருப்பதன் காரணமாக அந்த நேரத்தில் பொதுமக்கள் ஏசி பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும் என ஆந்திர மாநில ஆற்றல் துறை செயலாளர் ஸ்ரீதர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்
 
இந்த நேரங்களில் ஏசி பயன்பாட்டை குறைப்பதன் மூலம் 10 மில்லியன் யூனிட் வரை சேமிக்க முடியும் என்றும் இதனால் மின்வெட்டை தவிர்க்கலாம் என்றும் கூறியுள்ளார் முக்கிய நேரங்களில் ஏசி போட வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதை பார்க்கும் போது ஆந்திர மாநிலத்தில் விரைவில் பல மணி நேரம் மின்சார தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்