குஜராத் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் மோடி

Webdunia
புதன், 21 மே 2014 (11:43 IST)
நாடாளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வரும் 26 ஆம் தேதி பதவி ஏற்கவுள்ள நிலையில், அவர் இன்று குஜராத் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறார். 
நரேந்திர மோடியை, பாஜக நாடாளுமன்ற குழு பிரதமராக தேர்வு செய்ததை அடுத்து அவர் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்கிறார்.
 
இந்நிலையில், மோடி குஜராத் முதலமைச்சர் பதவியை மோடி இன்று ராஜினாமா செய்கிறார்.இதற்காக இன்று குஜராத் செல்லும் மோடிக்கு, சட்டசபை சிறப்பு கூட்டத்தில் உறுப்பினர்கள் பிரிவு உபச்சார விழா நடத்துகிறார்கள்.
 
அதற்கு பின்னர், கவர்னர் கமலா பேனிவாலை சந்தித்து தன் முதலமைச்ச்சர்  பதவியை  அவர் ராஜினாமா செய்வாரென தெரிகிறது. அதன்பின் தன் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகும் மோடி, குஜராத்தின்  புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
 
மோடிக்கு பிறகு குஜராத் முதலமைச்சர் பதவிக்கு ஆனந்தி பென் படேல் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குஜராத் முதலமைச்சர் நாளை பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.