டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (18:02 IST)
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
ஒருபக்கம் இன்று பங்கு சந்தையின் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ள நிலையில் இன்னொரு பக்கம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.76.26 ஆக அதிகரித்துள்ளது 
 
கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் சந்தோசம் அடைந்தாலும் உள் நாட்டு வர்த்தகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்