ஆந்திராவில் இன்று ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (08:10 IST)
ஆந்திராவில் இன்று ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா!
ஆந்திர மாநிலத்தில் இன்று ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
ஆந்திர மாநிலத்தில் புதிய அமைச்சர்கள் ஏப்ரல் 11ஆம் தேதி பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு அமைச்சர்களாக பதவி ஏற்றபோது இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டும்தான் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமென ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து இருந்ததை அடுத்து இன்று ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்