மோடியின் பத்து நிமிட பேச்சால் உயர்ந்தது பங்குச்சந்தை

சனி, 21 மார்ச் 2020 (07:55 IST)
மோடியின் பத்து நிமிட பேச்சால் உயர்ந்தது பங்குச்சந்தை
கொரோனா காரணமாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக படுவேகமாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஜனவரி மாதம் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த சென்செக்ஸ் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் இறங்கி 20 ஆயிரத்தை தொடும் நிலை வந்ததால் முதலீட்டாளர்கள் சுமார் 50% நஷ்டம் அடைந்தனர். இந்திய பொருளாதாரமே ஆட்டம் கண்டது
 
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் கொரோன குறித்த அச்சத்தை போக்கும் வகையில் பேசியதால் பங்குச்சந்தை நேற்று ஏற்றம் கண்டது. நேற்றைய பங்குச்சந்தையில் 2485 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதியில், 1627.73 புள்ளிகள் உயர்ந்து, 29915.96 புள்ளிகளில் நிலைபெற்றது.
 
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின், 'நிப்டி' 482 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 8745.45 புள்ளிகளில் நிலை பெற்றது என்பதால் முதலீட்டாளர்கள் ஓரளவுக்கு ஆறுதல் அடைந்தனர். அதேபோல் கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தது
 
கொரோனா அச்சம் நீங்கி இதேரீதியில் பங்குச்சந்தை சென்றால் ஒரே மாதத்தில் மீண்டும் பழைய நிலைக்கு பங்குச்சந்தை வந்துவிடும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்