ஜப்பான், இந்தோனேஷியாவை அடுத்து இந்தியாவிலும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு

Siva
புதன், 10 ஜனவரி 2024 (13:37 IST)
தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட தகவலில் அந்தமான் நிகோபார் தீவில் இனேஉ காலை 7.53 மணி அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், கடல் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளது,
 
மேலும் அந்தமான் நிகோபார் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் அல்லது  பொருட்சேதம் ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
 
சமீபத்தில் ஜப்பான், இந்தோனேசியாவில்  நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சமீபகாலமாக உலகம் முழுவதும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

ALSO READ: பொங்கல் பரிசுத் தொகுப்பு.. டோக்கன் பெறாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
 
இந்த புத்தாண்டு நாளில் ஜப்பானில் சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
 
நிலநடுக்கம் ஏற்படும்போது பதட்டமடையாமல் அமைதியாக இருக்க வேண்டும். மேலும்
பாதுகாப்பான இடத்திற்கு சென்று நிலநடுக்கம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். கட்டிடங்கள் சேதமடைந்திருந்தால் அதில் நுழையக்கூடாது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்